Search This Blog

Sunday, 8 February 2026

வானத்தின் பலகணிகள் திறக்கப்பட்டன

“நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:10)

எனது விலையேறப்பெற்ற நண்பரே, தேவன் பரிபூரணத்தின் தேவன், நாம் எப்போதும் பரிபூரண ஆசீர்வாதத்தை – கிருபையில் பரிபூரணம் (2 கொரிந்தியர் 9,8), ஜீவனில் பரிபூரணம் (யோவான் 10:10), அன்பில் பரிபூரணம் (யாத்திராகமம் 34:6)  மற்றும் ஐசுவரியங்களில் பரிபூரணம் (பிலிப்பியர் 4:19; உபாகமம் 28:8). உடையவர்களாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார்.

இந்த ஆசீர்வாதம் நமக்கு எப்போது வரும்? நாம்,

1. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றும்போது : தேவன்  நம்மை எங்கு அனுப்பினாலும், நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போகவேண்டும். அப்பொழுது நாம் செய்யும் எல்லாவற்றையும் அவர் ஸ்திரப்படுத்தி,  நமக்குப் பெரும் சுதந்தரத்தையும் செழிப்பையும் தந்தருளுவார். (உபாகமம் 28:1,2).

ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தான் போகும்படிஅவர் சொன்ன இடங்களுக்குச் சென்றான், தேவன் அவன் கால் மிதித்த அனைத்துப் பகுதிகளையும் கொடுத்து, அவனையும், அவனது சந்ததியினரையும் இஸ்ரவேல் என்ற பலத்த தேசமாக்கினார் (எபிரெயர் 11:8;  ஏசாயா 51:2; ஆதியாகமம் 26:4,5).

2. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள், அதைப் பிரசங்கியுங்கள் : ஆம்! கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதில் அவருக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் காணிக்கைகள் மற்றும் ஜெபங்கள் மூலம் இயேசுவை மக்களிடம் கொண்டு செல்லும் ஊழியத்தைத் தாங்குங்கள். அப்போது உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமற்போகும். நீங்களும் உங்கள் குடும்பமும் செழிப்பீர்கள். (அப்போஸ்தலர் 5:29)

3. எல்லாப் பொல்லாத தாக்குதல்களிலிருந்தும் உங்களை இரட்சிக்கும்படிக்கு தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள், அவரை விசுவாசியுங்கள் : (ரோமர் 5:19)

4. உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தேவன் உங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்வார் என்று கீழ்ப்படிந்து, விசுவாசியுங்கள் : தேவன் நம் வாழ்க்கையில் மரித்த அனைத்தையும் உயிர்ப்பித்து, புதிய வாழ்க்கையையும், நம் குடும்பத்தில் ஆசீர்வாதங்களையும் கொண்டு வருவார் (ரோமர் 4:14).

கொடுப்பதில் கீழ்ப்படிதல் : நமது சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை தேவ ஊழியர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுக்கும்போது, காணிக்கைகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். (ரோமர் 12:1:2; சங்கீதம் 16:2; ஏசாயா 58:7, 8)

கீழ்ப்படிதல் பரலோகத்தைத் திறக்கிறது.  நாம் கீழ்ப்படிந்து கர்த்தருடைய கிரியைகளைச் செய்யும்போது, நம் பெற்றோருக்கும், பூமிக்குரிய எஜமானர்களுக்கும், அரசாங்கச் சட்டங்களுக்கும் கீழ்ப்படியும்போது, நாம் செழிப்போம், நமது பட்டணம்  செழிக்கும். (1 கொரிந்தியர் 15:58; எபேசியர் 6:1,5;  எபேசியர் 5:22-24)

நாம் ஐசுவரியவான்களாக மாறும்படிக்கு இயேசு தரித்திரரானார் (2 கொரிந்தியர்  8:9). அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால், இப்போது நமக்காக வானத்தின் பலகணிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தேவனுடைய ராஜ்யத்திற்காக நீங்கள் எதையெல்லாம் விதைத்தீர்களோ, அதற்குப் பதிலாக தேவன் உங்களுக்கு இந்த மாதத்தில் பரிபூரண பெருக்கத்தைக் கட்டளையிடுவார்.

“என் அன்பின் பரலோகப் பிதாவே,  உம் பிள்ளையின் வாழ்க்கையை நிரம்பி வழியும் உம்முடைய  கிருபை, அன்பு மற்றும் அவர்களுக்கு வேண்டிய காரியங்களால் நிரப்பும். உம்முடைய வார்த்தைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து நடக்க அவர்களுக்கு உதவிசெய்யும். நீர் உம்முடைய தெய்வீக தயாளகுணத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்து, தாராளமாகக் கொடுக்கும் பழக்கத்தை அவர்களுக்குத் தாரும். உம்முடைய சத்தத்திற்கு அவர்களுடைய இருதயம் கவனம் செலுத்தி, அதன்படி நடக்க அவர்கள் எப்போதும் ஆயத்தமாயிருப்பதாக. ஒருவரும் பூட்ட முடியாத கதவுகளை அவர்களுக்காகத் திறந்து, உம்முடைய பாதைகள் அனைத்தையும் மூடிவிடும்.  இப்போதும் எப்போதும் அவர்கள் உமது ஆசீர்வாதங்களின் பரிபூரணத்திலே வாழ்வார்களாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

இயேசுவின் பாரத்தைச் சுமந்து செல்லுங்கள்

எனது விலையேறப்பெற்ற நண்பரே, அநேக நேரங்களில் நமது பாரங்களையும், கவலைகளையும் கர்த்தரிடத்தில் வைத்துவிடாமல், நாமே அதைச் சுமக்கின்றோம். இன்று நாம் அவரிடம் வந்து, இளைப்பாறுதலைக் கண்டடையும்படியாக நம்மை அழைக்கிறார்; தேவ சித்தத்தைச் செய்ய இளைப்பாறுதல் தருகிறார்.

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28)

இயேசுவின் பாரத்தை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் வாழ்க்கை மெதுவானதாகவும், இலகுவானதாகவும் மாறுகிறது. “கடவுளுடைய பாரத்தை நான் எப்படி சுமக்க முடியும்?” என்று நாம் ஒருவேளை ஆச்சரியப்படக்கூடும். தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் நம்மைத் தாழ்த்தி, அவருடைய சித்தத்திற்கு நம்மை அர்ப்பணித்து, அவருக்குப் பிரியமானதைச் செய்யும்போது, நாம் அவருடைய பாரத்தைச் சுமக்கின்றோம்.

இயேசுவின் பாரம் என்பது என்ன?

1. பாவத்தின் சாபத்திலிருந்து மனுக்குலத்தை மீட்கவேண்டும் : இயேசு தம்முடைய பாரத்தை நாம் சுமக்க வேண்டும் என்றும், சிலுவையில் அவருடைய தியாகபலியின் மூலமாக சம்பாதித்து வாங்கப்பட்ட இரட்சிப்பை பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் கொண்டு செல்லவேண்டும் என்றும் விரும்புகிறார். நாம் அவ்வாறு செய்யும்போது, கர்த்தர் மிகவும் பிரியப்படுவார். அவர் நமக்கு இளைப்பாறுதலைத் தந்தருளுருவார், மேலும் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் அவருக்குள் முழுமையான இளைப்பாறுதல் நிறைந்ததாக மாறும்.(1 தீமோத்தேயு 2:4; யோவான் 9:4–5; ஏசாயா 60:2–3)

இயேசு எவ்வாறு பாரத்தைச் சுமந்தார்? கெத்சமெனே தோட்டத்தில், இயேசு தேவனுடைய உக்கிர கோபாக்கினையின் பாத்திரத்தில் நிறைந்திருப்பதைப் பார்த்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெரும் துளிகளாக தரையில் விழும்படி செய்யும் அளவுக்கு அவரை அந்தப் பாரம் மூழ்கடித்தது. அவர் நம்முடைய பாவங்களையும், சர்வலோகத்தின் முழுப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு, 'என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது' என்று ஜெபித்தார், கர்த்தருடைய தூதன் ஒருவன் வந்து அவரைப் பலப்படுத்தினான்.

அப்பொழுது இயேசு எழுந்து தைரியமாக சிலுவைக்குச் சென்றார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக முழு மனுக்குலத்திற்குமான இரட்சிப்பின் பாதை திறக்கப்பட்டது. இயேசு தேவனுடைய பாரத்தைச் சுமந்தார், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினதன் மூலம் அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுத்தார். இயேசுவின் ஒளியை மற்றவர்களுக்குக் கொண்டுவர நாம் நம்மையே அர்ப்பணிக்கும்போது, தேவன் நம்மையும் எழுப்புவார். (லூக்கா 22:42-44; யோவான் 16:13; வெளிப்படுத்தல். 12:11; 3:8)

2. இயேசு ஜனங்களின் பாரங்களைச் சுமந்தார் : திரளான ஜனங்கள் தம்மைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்ட இயேசு மனதுருகினார். அவர்கள்மீது தமது கைகளை வைத்து, அவர்களைச் சுகமாக்கினார். இப்போது, அதே பாரத்தை நாமும் சுமக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மற்றவர்களின் பாரங்களைச் சுமப்பது கடினம்தான். ஆனால் இயேசு அதை அறிவார். நாம் மற்றவர்களின் பாரங்களைச் சுமப்பதன் மூலம், ஜனங்களுக்கு அற்புதங்களையும், சுகத்தையும், மறுசீரமைப்பையும் கொண்டு வருவதற்காக தேவன் நம்மைத் தம்முடைய பரிசுத்தஆவியால் நிரப்ப விரும்புகிறார். (மத்தேயு 9:35-36; எண்ணாகமம் 11:12-15) நம்முடைய பாரத்தை அல்ல, நாம் இயேசுவின் பாரத்தைச் சுமக்கும்போது, தேவன் நம்முடைய பாரத்தை நீக்குவார்.

“என் அன்பின் பரலோகப் பிதாவே, உம்முடைய பிள்ளையின் இருதயத்தை உம்முடைய வல்லமையின் ஆவியானவர் நிரப்பும்படியாக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் தங்கள் சொந்தப் பாரங்களை அல்ல, மற்றவர்களுடைய பாரங்களைச் சுமக்கத்தக்கதாக, அவர்களுக்கு ஒரு புதிய இருதயத்தைத் தாரும், அதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு இரட்சிப்பையும், சுகத்தையும் மற்றும் அற்புதங்களையும் கொண்டு வரட்டும். உம்முடைய ஞானம், அறிவு மற்றும் வெளிப்பாடுகளால் நிரப்பும். இயேசுவின் வல்லமை அவர்கள் மூலமாகப் பாய்வதாக. அவர்களுக்குத் தரிசனங்கள் உண்டாகட்டும். தீர்க்கதரிசன அபிஷேகம் அவர்களிலிருந்து எழும்பட்டும். அநேகருக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவதற்கான கிருபையை அவர்களுக்குத் தந்தருளும். அவர்கள் பாரங்களை நீக்கிவிடும். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் அற்புதங்களைச் செய்யும். அதைச் செய்வதற்காக நன்றி ஆண்டவரே. இயேசுவின் நாமத்தில், ஆமென்.”