Search This Blog

Sunday, 20 February 2011

ஈரோடு

ஈரோட்டின் மக்கள் தொகை சுமார் 30 இலட்சமாகும். ஈரோடு இந்தியாவின் துணி மார்க்கெட்டில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது. இங்கு 1,300க்கும் மேற்ப்பட்ட குடிசை தொழில்கள் நடைபெறுகின்றன. அநேக தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு கோஷா ஆஸ்பத்திரி என்னும் CSI ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கும் படித்து வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் ஏராளம்.


1. ஈரோட்டிலுள்ள 30 இலட்சம் மக்களும் இரட்சிக்கப்படும்படி ஜெபிப்போம்.


2. இங்குள்ள CSI பிரப் மெமோரியல் சபையின் மூலமாக வருடந்தோறும் நடக்கும் கன்வென்ஷனில் அநேகர் கர்த்தரை ஏற்று கொள்ளும்படியாகவும், இதோடு இணைந்து செயல்படும் மருத்துவமனையில் பயிலும் நர்சுகள் கர்த்தரை அறிந்து அன்போடும், இரக்கத்தோடும் வருகின்ற நோயாளிகளை சிகிச்சை அளிக்கும்படியாகவும், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.


3. இங்குள்ள சபை போதகர்களுக்காக, ஊழியங்களுக்காக, ஊழியர்களுக்காக ஜெபிப்போம்.


4. இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படவும், வறுமை மாறி செழித்திருக்கவும் ஜெபிப்போம்.


5. இங்குள்ள 862 கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு சபை எழும்பவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment