வேலூரின் மக்கள் தொகை சுமார் 40 இலட்சமாகும். ஆசியாவிலேயே புகழ்பெற்ற C.M.C. மருத்துவமனை இங்குள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய சிறைச்சாலை வேலூர் மத்திய சிறைச்சாலையாகும். இங்கு பெல், என்பீல்டு, பாரி போன்ற புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கடந்த ஐந்து வருடங்களாக சுமார் 2,102 க்கும் அதிகமான பெண் சிசுக்கொலைகள் நடந்துள்ளன.
1. இந்த மாவட்டத்திலுள்ள 40 இலட்சம் பேரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
2. C.M.C. மருத்துவமனையில் படித்து, உலகமெங்கும் வேலைசெய்கிற பல்லாயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் உண்டு. இந்த மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகள் கிறிஸ்துவே தேவன் என்றும், அவரே நோயை தீர்க்கிற பரிகாரி என்றும் அறிந்து கொள்ள ஜெபிப்போம்.
3. இங்கு வேலை செய்கிற ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும், அன்போடும், இரக்கத்தோடும் நோயாளிகளை கவனித்து கொள்ளவும், கிறிஸ்துவின் இரக்கத்தையும், சுகமளிக்கும் கிருபைகளை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.
4. பெண் சிசுக்கொலைகள் நிறுத்தப்படவும், பெண் குழந்தைகளை தேவனே கொடுக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ஜெபிப்போம்.
5. இங்குள்ள 1596 கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சபை எழும்பவும் ஜெபிப்போம்.

No comments:
Post a Comment