Search This Blog

Monday, 21 February 2011

கன்னியாகுமரி

கன்னியாகுமரியின் மக்கள் தொகை சுமார் 19 இலட்சமாகும். கன்னியாகுமரி முக்கடல் ஒன்று சேரும் இடம் என்னும் பெருமைக்குரியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடித்தல், ஏற்றுமதி செய்தல் முக்கிய தொழிலாக உள்ளது. கடலோர கிறிஸ்தவர்கள் அதிக அளவு இங்கு வாழ்கின்றனர். வரதட்சணை அதிகமாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு பாரம்பரிய கிறிஸ்தவர்களால் சுவிசேஷம் அறிவிக்க மிகுந்த தடை காணப்படுகிறது.


1. இந்த மாவட்டத்திலுள்ள 19 இலட்சம் மக்களும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2. வரதட்சணை வாங்குவது குறைக்கப்படவும், கிறிஸ்தவர்கள் வாழும் இந்த மாவட்டத்தில் கர்த்தருக்கு பயப்படுகிற மணமகனும், மணமகளுமாக இணையவும், பணம் அவர்களை சேர்த்து வைக்காதபடிக்கும் ஜெபிப்போம்.


3. பாரம்பரிய கிறிஸ்தவர்களும் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளவும், கிறஸ்துவுக்காக வாழவும் ஜெபிப்போம்.


4. மீன்பிடிக்கும் தொழில் செய்பவர்கள், பக்கத்து நாடாகிய இலங்கை கடற்படையினரால் கொல்லப்படாதபடிக்கும், தேவன் அவர்களை தற்காத்து கொள்ளவும் ஜெபிப்போம்.


5. இங்குள்ள 180 கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சபை எழும்பவும் ஜெபிப்போம். இங்குள்ள போதகர்களுக்காக, ஊழியர்களுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

No comments:

Post a Comment