Search This Blog

Thursday, 7 April 2011

தமிழ் நாடு - தேர்தல் - 2011

எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் இத்தனை நாளாக நாங்கள் எதிர்ப்பார்த்து வந்த தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிற எங்கள் பரம தகப்பனே, நீர் விரும்பும், உம்முடைய சித்தத்தை செய்யும் ஒரு ஆட்சி அமையத்தக்கதாக தேவன் கிருபை செய்வீராக.


விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம் என்ற வசனத்தின்படி, எங்கள் விருப்பங்கள் அல்ல தகப்பனே, நீர் எங்கள் தமிழகத்தின் மேல் இரங்கி, உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும் ஆட்சியை கட்டளையிடுவீராக. எந்தவித கலவரமும் இல்லாதபடி அமைதியாக ஓட்டுப்பதிவு நடக்கவும், ஜனங்கள் தங்கள் விருப்பத்தின்படி ஓட்டுக்களை தைரியமாக ஜனநாயக முறையில் ஓட்டளிக்கவும் கிருபை செய்வீராக.


இதுப்போல இந்தியாவில் இந்த நாளில் எங்கெங்கு தேர்தல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அமைதியான முறையில் நடந்தேற கிருபை செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment