பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். - (பிலிப்பியர் 3:13-14).
.
வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ள ஒரு இராஜா நல்ல வேட்டை நாய் ஒன்றை வாங்கினார். மிகப்பெரிய விலங்குகளை எல்லாம் வேட்டையாட வேண்டும் என்ற ஆவலோடு நாயுடன் காட்டிற்கு சென்றார். அந்த வேட்டை நாய் முதலாவது ஒரு சிங்கத்தினை துரத்தி சென்றது. நாம் வாங்கியது மிகவும் திறமை வாய்ந்ததுதான் என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் சிறிது தூரம் சென்றதும் அது ஒரு கரடியை துரத்தியது. என்ன இது, சிங்கத்தை விட்டுவிட்டு கரடியை துரத்துகிறதே, சரி கரடியையாவது சுட்டுவிட வேண்டும் என்று எண்ணி, ராஜா துப்பாக்கியை எடுத்தார். அதற்குள் அந்த வேட்டை நாய் ஒரு முயலை கண்டு அதை துரத்த ஆரம்பித்தது. ராஜாவிற்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. இந்த முயலை பிடிப்பதற்காகவா நான் வேட்டை நாயை வாங்கினேன் என்று எண்ணி ராஜா சோர்வடைந்தார்.
.
இதே போலத்தான் நம் ஒவ்வொருவரையும் தேவன் ஒரு இலட்சியத்தோடு இந்த உலகில் படைத்து இம்மட்டும் வாழ வைத்திருக்கிறார். உயர்ந்த இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட நாம் எதை நோக்கி ஓடி கொண்டிருக்கிறோம்? பாதையும் பார்வையும் சரியாக இருந்தால் நம் வாழ்க்கையை வெற்றியோடு ஓடி முடிக்கலாம். பாதையை விட்டு பக்கங்களில் கவனம் வைத்தால் விபத்து நேரிடுவது எளிதாகும்.
.
நம் வாழ்வில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை நியமிக்கப்பட்டடிருக்கிறது. நமக்கு நியமிக்கப்பட்டிரு;கிற பாதையில் தடம் புரளாமல் முன் செல்ல வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போன்று நம் சிந்தையில் கற்பனை செய்துகொள்வோம். ஓடுகிற பாதையில் நம் முன் பணம், புகழ், வெற்றி, தோல்வி என எது வந்து நின்றாலும் நாம் அதில் மயங்கியோ சோர்ந்தோ அப்படியே நின்று விடக்கூடாது. நம் அருகில் ஓடுகிறவர்களை கவனித்துக் கொண்டேயும் ஓட வேண்டாம். அவர்களின் குறைகளையே பார்த்து பார்த்து நமது குறைகளை கவனிக்காமல் விட்டு விடுவோம்.
.
சிலருக்கு ஓட்டத்தின் ஆரம்பம் நன்றாக இருந்திருக்கலாம். சிலர் பாதி தூரம் நன்றாக ஓடியிருந்திருக்கலாம். ஆனால் முடிவு வரை ஓடி முடிப்பவர்களுக்கே வெற்றி. ஓட்டத்தை வேகமாய் ஆரம்பித்த அநேகர் பாதி வழியில் நின்று விடுகின்றனர். பக்கமாய் விலகி விடுகின்றனர். இதை வாசிக்கிற நாம் எப்படி ஓடி கொண்டிருக்கிறோம்?
.
வேதத்திலே தக்பபனை ஏமாற்றிய யாக்கோபின் வாழ்க்கை பாதையை பார்ப்போமானால் எத்தனையோ ஏமாற்றங்கள், தோல்விகள், இழப்புகள் ஆகியவற்றை சந்தித்ததை பார்க்கிறோம். ஆனால் தேவனோடு ஐக்கியப்பட்டு எல்லாவற்றையும் சரிபடுத்துகிறார். விடாப்பிடியாக தேவனிடத்தில் மன்றாடி ஆசீர்வாதத்தையும் பெற்று கொண்டார். நாமும் பாதையில் தவறியிருந்தாலும், திசை மாறி சென்றிருந்தாலும் இருக்கிற வண்ணமாகவே தேவனிடத்தில் வருவோமானால் தேவன் நம்மை சரிப்படுத்தி வாழ்க்கை பாதையில் சீராய் ஓட செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
எத்தனைதான் இடறல்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இன்ப பாதையிலே நான் ஓடுகிறேன்
..
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் (2)
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
ஜெபம்
எங்கள் அன்பின் பரிசுத்தமுள்ள தகப்பனே, தேவரீர் எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் எத்தனை இடர்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளோ, பிரச்சனைகளோ வந்தாலும், பாதையை விட்டு நாங்கள் விலகி விடாமல், இலக்கை நோக்கி ஓடி முடிக்க கிருபை செய்வீராக. ஒரு வேளை பாதையை விட்டு விலகியிருந்தால் மீண்டும் எங்களை சேர்த்து கொள்கிற, யாரையும் தள்ளி விடாத உம்மிடத்தில் வந்து சேர்ந்து, சீராய் ஓட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:
Post a Comment