மனுஷனுடைய வழிகளெல்லாம் அதன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். - (நீதிமொழிகள் 16:2).
கெட்ட குமாரன் என்ற தலைப்பில் தான் வரைய வேண்டிய ஓவியத்திற்காக நல்ல ஒரு மாடலை தேடி நியூயார்க் நகர வீதிகளில் அந்த ஓவியன் அலைந்து திரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு பார்க் வழியாக செல்லும்போது அங்கு படுத்திருந்த ஒரு ஏழையான பிச்சைக்காரனை கண்டு, அவன்தான் தான் தேடி கொண்டிருக்கும் சரியான மாடல் என்று நினைத்து மகிழ்ந்தார். அவனிடம் சென்று தான் வரையும் ஓவியத்திற்கு அவன் உட்கார்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதற்கு தகுந்த பணம் தருவதாகவும் கூறினார். அதற்கு அந்த பிச்சைக்காரனும் சம்மதித்தான்.
குறிப்பிட்ட அந்த நாளில் ஓவியரின் வீட்டு வாசலில் ஒரு மனிதன் நன்றாக உடை உடுத்தி வந்து கதவை தட்டினான். கதவை திறந்த ஓவியர் 'நீங்கள் இடம் மாறி வந்திருக்கிறீர்கள். நீங்கள் தேடும் நபர் நான் அல்ல' என்று கூறி கதவை மூட முயன்றார். வெளியில் நின்றிருந்தவர், 'ஐயா, நான்தான் அந்த பிச்சைக்காரன். நீங்கள் என்னை ஓவியமாக வரைய வேண்டுமென்று சொன்னதால், நான் குளித்து, முகச்சவரம் செய்து புதிய உடை உடுத்தி நேர்த்தியாக வந்திருக்கிறேன்' என்றான். மனதில் அதிருப்தி அடைந்த ஓவியர், 'நான் வரையும் ஓவியத்திற்கு நீ தகுதியானவன் அல்ல' என்று திருப்பி அனுப்பி விட்டார். அந்த பிச்சைக்காரன் தன்னை தகுதியுள்ளவனாக காட்ட விரும்பினான். ஆனால் ஓவியரோ அவன் இருந்த வண்ணமாகவே அவனை சிறந்த ஓவியமாக தீட்ட விரும்பினார்.
இதைப்போலத்தான் நாமும் தேவனுக்கு முன்பாக வரும்போது, நமது சுயநீதிகளினால் நம்மை அலங்கரித்து கொண்டு வரக்கூடாது. அதாவது தேவ சமுகத்தில் முழங்கால்படியிடும்போது, 'இம்மாதம் தசமபாகம் செலுத்தி விட்டேன், என் வீட்டிலே நான் தான் நல்லவன், என் பிள்ளைகளை நான் நன்றாக வளர்த்திருக்கிறேன், நான்தான் தினமும் சரியாக ஜெபிக்கும் பழக்கமுள்ளவன், நான் எல்லவற்றிலும் சரியாக இருக்கிறேன்' என்பது போன்ற சுயநீதிகளால் அலங்கரித்து கொண்டு, வரும்போது தேவன் நம்மில் கிரியை செய்யவே முடியாது. நம்மை பரிசுத்தப்படுத்தவும் முடியாது. ஆனால் அவருக்கு முன்பாக எந்த ஒளிவு மறைவுமின்றி, சுயபெருமையுமின்றி இருக்கிற வண்ணமாக இயல்பாகவே வர வேண்டும்.
'தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு' (நீதிமொழிகள் 30:12) என்று வேதம் கூறுகிறது. தங்கள் பார்வைக்கு அவர்கள் நீதிமான்கள் போன்று தோன்றுகிறார்கள். என்னை போன்று பரிசுத்தமுள்ளவன் யார்? என்று நினைத்து கொள்கிறார்கள். நாம் வாழும் இந்த உலகம் பாவங்களும், இச்சைகளும், அசுத்தங்களும் நிறைந்தது. கொடுமை நிறைந்தது. அப்பேற்பட்ட உலகத்தில் வாழுகிற நம்மேல், அதன் தூசி நிச்சயமாய் பட்டிருக்கும். ஏதாவது ஒரு வகையில், நம் பேச்சிலோ, நடத்தையிலோ நம்மை அறியாமல் பாவத்தில் விழுந்திருக்கலாம். ஆகையால்; ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய கிருபையினால், அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக வாழ வேண்டும்.
பிரியமானவர்களே, நாம் எவ்வளவு அலங்கரித்து கொண்டு வந்தாலும் நம்முடைய குறைவுகள், பெலவீனங்கள் எல்லாம் நம் தேவனுக்கு தெரியும். நம்மால் எதையும் அவரிடம் இருந்து மறைக்க முடியாது. ஆகவே நாம் திறந்த மனதோடு, ' தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்து அவருடைய கிருபைக்காக காத்திருக்கும்போது, தேவன் நம்மை மார்போடு சேர்த்து அணைத்து, நம்மை ஏற்று கொள்வது நிச்சயம். நாம் நம்மை இருக்கிற பிரகாரமாகவே அவரிடத்தில் வந்து, அவருடைய கிருபையை பெற்று வாழும்படியாக தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தன் பெலனுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
..
தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் இருக்கிற வண்ணமாகவே உம்முடைய சமுகத்தில் வருகிறோம் தகப்பனே. எங்களிலே காணப்படும் பெருமைகள், சுயநீதிகள், எங்கள் அந்தஸ்து எல்லாமே உமக்கு முன்பாக ஒன்றுமில்லை, அழுக்கான கந்தைகள் என்று அறிந்து உணர்ந்து, உம்முடைய நீதியையே சார்ந்து வருகிறோம் ஐயா. எங்களை ஏற்று கொள்ளும். வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:
Post a Comment