கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. - (சங்கீதம் 29:4).
தெற்கு பசிபிக் கடலில் உள்ள சாலமோன் தீவுகளில் வாழும் பழங்குடியினருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்த முடியாவிட்டால், சூரியன் உதிக்குமுன்னர் அந்த தீவில் உள்ள மரத்தை வெட்டுபவர்கள் அந்த மரத்தின் மேல் ஏறி கொண்டு, திடீரென்று உரத்த சத்தத்தில் ஒரே நேரத்தில் கத்துவார்களாம். அப்படி தொடர்ந்து 30 நாள் கத்துவார்களாம். அப்படி கத்தும்போது, அந்த மரம் அப்படியே செத்து போய் கீழே விழுந்து விடுமாம்.
நாமும் கூட நம் பிள்ளைகளை அதட்டுகிறோம். நம் மனைவி, கணவரிடம் சத்தம் போடுகிறோம். நாம் காரில் செல்லும்போது, யாராவது தவறாக குறுக்கே வந்துவிட்டால், வாயில் என்ன வருகிறதோ அதை சொல்லி சத்தம் போடுகிறோம். நம்மில் சிலர் நமக்கு கீழே வேலை செய்கிறவர்களை அவர்கள் மனம் புண்படும்படி சிலவேளைகளில் அதட்டுவதும் உண்டு.
அப்படி செய்வதனால் அவர்களின் ஆவி அப்படியே தணிந்து போய் விடும் நிலைமைகளும் ஏற்படுவதுண்டு. மனிதனின் சத்தம் அதை தான் செய்யும். மற்றவர்களை செயலிழக்க செய்யும் வல்லமை மனிதனின் சத்தத்திற்கு மாத்திரம் தான் உண்டு.
ஆனால் 'கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது' என்று பார்க்கிறோம். சங்கீதம் 29-ல் ஏழு வசனங்கள் கர்த்தரின் சத்தம் என்ன செய்யும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஏழு என்பது பூரணத்தை குறிக்கும். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
'கர்த்தருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது' என்று வெளிப்படுத்தின விசேஷம் 1:15-ல் வாசிக்கிறோம். 'கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின் மேல் இருக்கிறார்' (சங்கீதம் 29:3) என்றும் பார்க்கிறோம். அவருடைய சத்தம் வல்லமையுள்ளது, அவருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
'அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றி போயிற்று' (சங்கீதம் 106:9) என்று பார்க்கிறோம். அவர் அதட்டினவுடனே அவருடைய சத்தத்திற்கு அத்தனை பெரிய சமுத்திரம் வற்றி போய் இஸ்ரவேலருக்கு வழியை விட்டது. நம் வாழ்க்கையிலும் சிவந்த சமுத்திரத்தை போன்ற தடைகள் வந்து நாம் முன்னேற முடியாதபடி நிற்கின்றனவா? சமுத்திரத்தின் மேலும், தண்ணீர்களின் மேலும் அதிகாரமுள்ள சர்வவல்லமையுள்ள தேவன் நம் வாழ்விலும் காணப்படும் தடைகள் மேல் அதிகாரத்துடன், தடைகளை அதட்டி, நமக்கு வழிவிடும்படி அவரை நம் வாழ்வில் அனுமதிப்போமா?
'அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று' (மத்தேயு 8:26) என்று பார்க்கிறோம். சீடர்கள் சென்று கொண்டிருந்த படகு அமிழத்தக்கதாக காற்று வீசி அலைமோதி கொண்டிருந்தபோது, அந்த படகில் இயேசுகிறிஸ்து இருந்தததினால், அவர் காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. நம் வாழ்க்கையிலும், அமைதி இல்லாதபடி, படகு நடுக்கடலில் புயலினால் அலைமோதி கொண்டிருப்பது போல தடுமாறி கொண்டிருக்கிறதா? அன்று இயேசுகிறிஸ்து அந்த படகில் இருந்தபடியினால், அவர் அதட்டியவுடன் காற்று அமர்ந்தது. புயல் அமர்ந்தது. கடல் அமைதியாயிற்று. இயேசு உங்கள் வாழ்க்கை படகில் இருந்தால், அவர் காற்றையும், புயலையும் போல பிரச்சனைகள் வந்தாலும், அவர் அதை அமைதியாக்குவார். அவர் இருக்கும் படகு பத்திரமாய் கரை சேரும். நம் வாழ்வும் நிச்சயமாய் கரை சேரும்.
'இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்' (மத்தேயு 17:18). பிசாசின் வல்லமை உங்கள் வாழ்வை தடுமாற செய்கிறதா? சத்துருவின் போராட்டம் என் வாழ்வில் பெரிதாயிருக்கிறது, வியாதி விடாமல் என்னை தாக்கி கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்களா? அந்த பிசாசின் கிரியைகளைவிட இயேசுகிறிஸ்துவின் சத்தம் வல்லமையுள்ளது. அவர் அதட்டினவுடனே, பிசாசு அந்த இளைஞனை விட்டு போனது போல சத்துருவின் எந்த வல்லமையும் இயேசுகிறிஸ்துவின் வல்லமையின் முன் நிற்க முடியாது. ஆமென். நம் வாழ்வில் சிவந்த சமுத்திரத்தை போல ஆழமான பிரச்சனைகளும், இயேசு பயணம் செய்த படகு நடுக்கடலில் புயலினால் மாட்டி கொண்டது போல புயல் போன்ற பிரச்சனைகளினால் எப்படி வெளியேறுவது என்று தத்தளிக்கும்போதும், பிசாசின் போராட்டங்களினாலும் வியாதிகளினால் தவித்து கொண்டிருக்கும்போதும், கர்த்தரின் சத்தம் நம் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும் வல்லமையுள்ளதாகவே இருக்கிறது. அவர் அவற்றை அதட்டி நமக்கு விடுதலையை தருவார். அவரையே நாம் பற்றி கொள்வோம். அவருடைய கர்த்தருடைய சத்தம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மகத்துவமுள்ளது. ஆமென் அல்லேலூயா!
வாழ்க்கைப் படகினிலே
வரும் அலைகள் நடுவினிலே
வந்தே அமர்த்திடுவார்
வல்ல தேவனை துதித்திடுவேன்
..
வறுமை வியாதிகளும் - என்னை
வருத்திய போதினிலும்
வைத்தியராய் இருந்தே என்
வேண்டுதல் கேட்டிடுவார்
..
இயேசுவே என் தேவன்
என்னை என்றும் நடத்திடுவார்
..
ஜெபம்:
மகா இரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் நல்ல தகப்பனே, மனிதரின் சத்தம் மற்றவர்களை விழ செய்யும், செயலற்று போக செய்யும். ஆனால் கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது, அவர் சத்தம் எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும் வல்லமையுள்ளதாகவே இருக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் உம்முடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறவர்களாக, உம்முடைய சத்தம் எங்கள் வாழ்வில் வல்லமையுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்கிற தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

No comments:
Post a Comment