“பணத்தை வாங்குவதற்கும்…. சம்பாதிப்பதற்கும் இதுவா காலம்.” - 2 ராஜாக்கள் 5 : 26
எலீஷா இஸ்ரவேலில் பெயர் பெற்ற தீர்க்கர். இவருடைய வேலைக்காரர் பெயர் கேயாசி. சீரியா நாட்டின் படைத்தளபதி பெயர் நாகமான். நாகமான் ஒரு தொழுநோயாளி. நாகமான் எலீஷாவைத் தேடி வந்தார். எலீஷா, தொழுநோய் குணமாகின்ற அற்புத வழியைச் சொன்னார். நாகமான் அற்புத குணம் பெற்றார். நாகமான் நன்றியுடன் எலீஷாவுக்குக் காணிக்கை கொடுத்தார். எலீஷா பெற்றுக்கொள்ளவில்லை. கேயாசி இதை அறிந்தார். நாகமான் திரும்பிச் சென்றார். கேயாசி வேகமாகச் சென்றார். நாகமானைச் சந்தித்தார். தீர்க்க தரிசன சங்கத்தாருக்குத் தேவை என்று சொல்லி, கொஞ்சம் வெள்ளியும் துணிகளும் பெற்றுக் கொண்டார். இதை அறிந்த எலீஷா `பணத்தை வாங்க.. சம்பாதிக்க இதுவா காலம்’ என்று கேட்டார். அற்புத சுகம் காட்டி, அற்பப் பணம் பெறுதல் ஆரோக்கிய ஊழியம் அல்ல!
திருப்பணியில் ஈடுபட்டிருப்போரின் வாழ்க்கைத் தேவைக்காக பொருளுதவி செய்வது தவறில்லை. `வேலைக்காரர் கூலிக்குப் பாத்திரர்’. ஆனால் திருப்பணியாளர் வெள்ளிக்கும் பொன்னுக்கும் (அப்போஸ்தலர் 20 : 33), காருக்கும், ஏசிக்கும் காணிக்கை வாங்குவது `கையூட்டுக் காணிக்கை’ ஆகிவிடுமல்லவா! சுகமளிப்பவர் ஆண்டவர்! இதற்குப் பணம் பெறுவது சரியா? லட்சக் கணக்கில் செலவு செய்து சில ஆயிரங்களைக் காணிக்கையாகப் பெறுகின்றனர்
பல கிறிஸ்தவர்களுக்கு இன்னும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. தாங்கள் உறுப்பினராக இருக்கிற சொந்த சபைக்கு, பூர்வீக சபைக்கு கொடுப்பதற்கு முணுமுணுப்பர். சிலர் அளந்து கொடுப்பர். இவர்களே, பிற சபைகளுக்கு ஊழியக்களங்களுக்கு வாரி வழங்குவர். ஊழியத்தின் பெயர் சொல்லி அளவுக்கு அதிகமாக வாங்குவதும், கொடுப்பதும் கேயாசி செய்த பாவத்திற்குச் சமம். இப்படிச் செய்வது தேவ துரோகம். பாவக் காணிக்கை பெறாதீர்! பாவக் காணிக்கை வழங்காதீர்.
No comments:
Post a Comment