Search This Blog

Monday, 19 May 2014

கலங்காதீர்கள்

ஆவிக்குரிய வாழ்வில் அனேக கலக்கங்கள் உண்டு! ஆனால் அவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவர் இயேசு நம்மோடு உண்டு! நாம் உண்மையாய் கர்த்தரின் வார்த்தைகளில் நிலைத்திருக்க முயற்சிக்கும்போது, உலகத்தாலும், சாத்தானாலும், சூழ்நிலைகளாலும் சிக்கவேண்டிவரும்! தடைகளைத்தாண்டவேண்டியிருக்கும்! தடைகளைத் தகர்க்கும் தகப்பன் நமக்குமுன்பாகச் செல்லுகிறார்!

ஆவிக்குரிய வறுமை கலக்கங்களைக் கொண்டுவரும்! கர்த்தரின் வார்த்தைகளைத் தியானித்து அவரில் நிலைத்திருந்தால் கலக்கமோ, கவலையோ நமக்கில்லையே!

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8:17) ஆமென்!

ஜெபம்:          
எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே! உமது நல்வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்! கலக்கங்களிலிருந்து விடுவிக்கிறவரே! எங்களைக் காத்துக்கொள்ளும்! விசுவாசத்தில் வர்த்திக்கப்பண்ணும்! எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!

No comments:

Post a Comment