எனது விலையேறப்பெற்ற நண்பரே, தேவன் பரிபூரணத்தின் தேவன், நாம் எப்போதும் பரிபூரண ஆசீர்வாதத்தை – கிருபையில் பரிபூரணம் (2 கொரிந்தியர் 9,8), ஜீவனில் பரிபூரணம் (யோவான் 10:10), அன்பில் பரிபூரணம் (யாத்திராகமம் 34:6) மற்றும் ஐசுவரியங்களில் பரிபூரணம் (பிலிப்பியர் 4:19; உபாகமம் 28:8). உடையவர்களாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார்.
இந்த ஆசீர்வாதம் நமக்கு எப்போது வரும்? நாம்,
1. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைப் பின்பற்றும்போது : தேவன் நம்மை எங்கு அனுப்பினாலும், நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போகவேண்டும். அப்பொழுது நாம் செய்யும் எல்லாவற்றையும் அவர் ஸ்திரப்படுத்தி, நமக்குப் பெரும் சுதந்தரத்தையும் செழிப்பையும் தந்தருளுவார். (உபாகமம் 28:1,2).
ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தான் போகும்படிஅவர் சொன்ன இடங்களுக்குச் சென்றான், தேவன் அவன் கால் மிதித்த அனைத்துப் பகுதிகளையும் கொடுத்து, அவனையும், அவனது சந்ததியினரையும் இஸ்ரவேல் என்ற பலத்த தேசமாக்கினார் (எபிரெயர் 11:8; ஏசாயா 51:2; ஆதியாகமம் 26:4,5).
2. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள், அதைப் பிரசங்கியுங்கள் : ஆம்! கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதில் அவருக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் காணிக்கைகள் மற்றும் ஜெபங்கள் மூலம் இயேசுவை மக்களிடம் கொண்டு செல்லும் ஊழியத்தைத் தாங்குங்கள். அப்போது உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமற்போகும். நீங்களும் உங்கள் குடும்பமும் செழிப்பீர்கள். (அப்போஸ்தலர் 5:29)
3. எல்லாப் பொல்லாத தாக்குதல்களிலிருந்தும் உங்களை இரட்சிக்கும்படிக்கு தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள், அவரை விசுவாசியுங்கள் : (ரோமர் 5:19)
4. உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தேவன் உங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்வார் என்று கீழ்ப்படிந்து, விசுவாசியுங்கள் : தேவன் நம் வாழ்க்கையில் மரித்த அனைத்தையும் உயிர்ப்பித்து, புதிய வாழ்க்கையையும், நம் குடும்பத்தில் ஆசீர்வாதங்களையும் கொண்டு வருவார் (ரோமர் 4:14).
கொடுப்பதில் கீழ்ப்படிதல் : நமது சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை தேவ ஊழியர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுக்கும்போது, காணிக்கைகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். (ரோமர் 12:1:2; சங்கீதம் 16:2; ஏசாயா 58:7, 8)
கீழ்ப்படிதல் பரலோகத்தைத் திறக்கிறது. நாம் கீழ்ப்படிந்து கர்த்தருடைய கிரியைகளைச் செய்யும்போது, நம் பெற்றோருக்கும், பூமிக்குரிய எஜமானர்களுக்கும், அரசாங்கச் சட்டங்களுக்கும் கீழ்ப்படியும்போது, நாம் செழிப்போம், நமது பட்டணம் செழிக்கும். (1 கொரிந்தியர் 15:58; எபேசியர் 6:1,5; எபேசியர் 5:22-24)
நாம் ஐசுவரியவான்களாக மாறும்படிக்கு இயேசு தரித்திரரானார் (2 கொரிந்தியர் 8:9). அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால், இப்போது நமக்காக வானத்தின் பலகணிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தேவனுடைய ராஜ்யத்திற்காக நீங்கள் எதையெல்லாம் விதைத்தீர்களோ, அதற்குப் பதிலாக தேவன் உங்களுக்கு இந்த மாதத்தில் பரிபூரண பெருக்கத்தைக் கட்டளையிடுவார்.
“என் அன்பின் பரலோகப் பிதாவே, உம் பிள்ளையின் வாழ்க்கையை நிரம்பி வழியும் உம்முடைய கிருபை, அன்பு மற்றும் அவர்களுக்கு வேண்டிய காரியங்களால் நிரப்பும். உம்முடைய வார்த்தைக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து நடக்க அவர்களுக்கு உதவிசெய்யும். நீர் உம்முடைய தெய்வீக தயாளகுணத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்து, தாராளமாகக் கொடுக்கும் பழக்கத்தை அவர்களுக்குத் தாரும். உம்முடைய சத்தத்திற்கு அவர்களுடைய இருதயம் கவனம் செலுத்தி, அதன்படி நடக்க அவர்கள் எப்போதும் ஆயத்தமாயிருப்பதாக. ஒருவரும் பூட்ட முடியாத கதவுகளை அவர்களுக்காகத் திறந்து, உம்முடைய பாதைகள் அனைத்தையும் மூடிவிடும். இப்போதும் எப்போதும் அவர்கள் உமது ஆசீர்வாதங்களின் பரிபூரணத்திலே வாழ்வார்களாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
jesus jewish pedophile pig.
ReplyDelete