கர்த்தரிடமிருந்து காத்திருந்து வார்த்தைகளைப்பெற்று, சபையில், பிற இடங்களில் பிரசங்கம் செய்யும் ஒவ்வொரு உண்மை ஊழியரின் மிகுந்த ஆசையும்; வாஞ்சையும் என்னவென்றால், தன் பிரசங்கத்தைக் கேட்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் இரட்சிப்படைந்து, இயேசுவின் நாமத்தில் ஓர் விடுதலையும், புது வாழ்வையும் பெற்று, கர்த்தர் நாமத்தைப் மகிமைப்படுத்தவேண்டும் என்பதுதான்.
எத்தனை பிரசங்கிகள்; எத்தனை எத்தனை பிரசங்க வார்த்தைகள்? ஓ! உலகம் பொல்லாங்கனுக்குள் கிடந்து உழன்று, அந்த அநித்திய சந்தோஷங்களை விட்டுவிட பிரியமில்லாதபடியினாலேதானே, இன்னும் வார்த்தைகள் வீணாக உள்ளன! ஆனாலும் கேட்கிற; படிக்கிற; தியானிக்கிற தேவனின் வார்த்தைகளை உண்மையாய் தியானித்து, அதை மறவாமல் கைக்கொள்ளுகிற பிள்ளைகளுக்கோ எத்தனை ஆசீர்வாதம்? அவர்களது சிரசின்மேல் நித்திய ஆசீர்வாதங்கள் தங்குமே! அந்த இருதயங்களே கர்த்தரின் பரிசுத்த தேவாலயங்கள்! சர்வவல்லவர் அங்கேதானே தங்கி நடத்திடுவார்! மகிமைப்படுவார்! ஆமென்!
= ஜெபம் செய்வோம் =
அன்பின் தகப்பனே! உமது வார்த்தைகளை மறவாமல், இருதயத்தில் உண்மையாய் நடக்க உதவிடும்! இரட்சகர் இயேசுவின் பெயரால் வேண்டுகிறோம், நல்ல பிதாவே, ஆமென்.
No comments:
Post a Comment