Search This Blog

Friday, 31 January 2014

ஓரினசேர்க்கை

ஒழுக்கக்கேடு அதிகம் நிறைந்து காணப்பட்டது. ஓரினசேர்க்கையைக் (ஆண்புணர்ச்சியைக்) குறித்து தேவன் என்ன எண்ணுகிறார் என்று ஒருவர்
அறிந்துக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான அனைத்துப் பதில்களையும் இந்த அதிகாரத்தில் பார்க்கமுடியாது. ரோமர் முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு உதாரணமாக ஆதி 19ம் அதிகாரம் அமைந்துள்ளது. ஓரினச் சேர்க்கையை (ஆணோடு-ஆண், பெண்ணோடு- பெண் தவறான புணர்ச்சிக்கு) அனுமதிக்கும், ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது நகரமும் தேவனின் நியாயத்தீர்ப்பின் கீழ்வரும் என்பதை மறக்கக்கூடாது. பாலியல் (Sex) உறவில், தேவனுடைய வழிகளை முற்றிலும் தள்ளிவிட்டதற்குஓரினச்சேர்க்கை (ஆணோடு-ஆண் சேர்க்கை) அடையாளமாக உள்ளது. தேவனுடைய பரிசுத்த வழிகளைத் தள்ளிவிட்டதற்கு ஆதாரமாக மூன்றுவித மாற்றங்களைக் மனிதன் எற்படுத்திக்கொண்டதைக் குறித்து ரோம 3:23-27ல் கூறுகிறது. முதலாவது, வ 23ல் அழிவில்லாத தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனுஷர், மிருகம், பறவைகளின் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். அடுத்ததாக, தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றினார்கள் (வச 25). இறுதியாக, சுபாவ அநுபோகத்தை சுபாவத்துக்கு விரோத அநுபோகமாக மாற்றினார்கள் (வ.26,27). தேவனையும், தேவனுடைய வழிகளையும் வெறுப்பவர்களுக்கு ஓரினச் செயலே இறுதியாக உள்ளது. எனவேதான் ஓரினச் சேர்க்கையைக் குறித்து...அக்கிரமம் (ஆதி 19:7). என்றும்,....அருவருப்பு (லேவி 18:22 20:13) என்றும்,...மதிகேடானது (நியா19:23-24) என்றும், சுபாவத்திற்கு மாறானது,...உணர்ச்சிமயமானது (ரோ1:27) என்றும்,...விபச்சாரம் (யூதா 7) என்றும் வேதம் ஒரே குரலில் கண்டிக்கிறது. இது இயற்கையான வாழ்விற்கு மாற்றானது அல்ல, மாறாக, தேவனுடைய திட்டத்திற்கு எதிரானதும்,
வருத்தத்தையும், பாவத்தையும் மரணத்தையும் பலனாக கொண்டது.

No comments:

Post a Comment